மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா

மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் ரூ.3.93 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். தூத்துக்குடி சத்திரம் தெரு, மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை கனிமொழி எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மாணவ - மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story