இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்- பல வருடமாக போராடும் மக்கள்!

வேடப்பட்டி
மடத்துக்குளம் வட்டம் வேடபட்டியில் அமராவதி அணை பிரதான கால்வாயில் இருந்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக கான்கிரீட் அமைத்து கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகமாகும் பொழுது, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் சென்று பயிர்கள் சேதம் அடைவதாக கூறி அந்த கிளை வாய்க்காலின் கான்கிரீட் கரைகள் உடைக்கப்பட்டு, வேறு வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.. அந்தத் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. முறையாக வடிகால் அமைக்காமல் முறைகேடாக வாய்கால் கரை உடைக்கப்பட்டு தண்ணீரை திருப்பி விடுவதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர்.. ஆனால் ஓய்வு பெற்ற தாசில்தார் தயானந்தன் என்பவர் அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்வதை தடுப்பதற்காக, முறைகேடாக உடைக்கப்பட்ட கால்வாயை அடைக்க விடாமல் தடுப்பதாகவும், அதை எதிர்த்து கேள்வி கேட்ட மக்களை கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது..இதனால் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைவதாக கூறப்படுகிறது.. இதனிடையே சம்பவ இடத்திற்கு மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி, பாசன சங்கத் தலைவர் மயில்சாமி, நெடுஞ்சாலை துறை ஏடி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.. விசாரணையில் கால்வாய் உடைக்கப்பட்டதை உறுதி செய்தனர் மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நேரில் வராததால், அவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கூறிச் சென்றனர்..
Next Story