தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக முனைவர் தௌ.சம்சு அவர்கள் நியமனம்
Krishnagiri King 24x7 |26 Oct 2024 7:30 PM GMT
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக முனைவர் தௌ.சம்சு அவர்கள் நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக முனைவர் தௌ.சம்சு அவர்கள் நியமனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அருள்குமார், மாநிலத் துணைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலையில் மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் என 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புதிய மாவட்ட செயலாளராக முனைவர் தௌ.சம்சு அவர்களும் ஒருங்கிணைப்பாளராக பெருமாள் அவர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை சார்ந்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக முதல்வர் அவர்கள் தீபாவளிக்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்தும் இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 6,00,000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு விரைவாக நிறைவேற்றிட வேண்டும், கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட சரண்டு விடுப்புத் தொகையை விரைவாக ஒப்படைக்க வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்திட வேண்டும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும், உயர்கல்வி ஊக்கத்தொகை பழைய முறையிலேயே மாற்றி அமைத்திட வேண்டும், ஆடிட்டர் அப்ஜக்ஷன் பல்வேறு மாதிரியாக சகட்டுமேனிக்கு ஆடிட்டர்கள் கையாளப்படுகின்றனர் அந்த முறையினை மாற்றி ஆடிட்டருக்கு என தனியாக முறைகளை வகுத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
Next Story