நிதி நிறுவன கெடுபிடியால் கூலித் தொழிலாளி தற்கொலை
Komarapalayam King 24x7 |27 Oct 2024 4:50 AM GMT
குமாரபாளையத்தில் நிதி நிறுவன கெடுபிடியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் வட்டமலை ஜோதி,நகரில் வசிப்பவர் விசைத்தறி தொழிலாளி ஞானசேகரன், 47. இவர் சில நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திரும்ப செலுத்த முடியவில்லை. நிதி நிறுவன நிர்வாகிகள் தொடர்ந்து இவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானசேகரன் வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணியளவில் தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . மனைவி மகாலட்சுமி மற்றும் மகன் கலையரசு , மகள் தனப்பிரியா ஆகியோர்களை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் இது குறித்து தகவல் வெளியானதால் முதலா அமைப்பினரும் தொழிற்சங்கத்தினரும் மருத்துவமனையில் திரண்டு இறந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதற்கு காரணமான தனியார் நிதி நிறுவன மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தினர் மேலும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் படவீடு பெருமாள் தலைமையில் காவல் நிலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story