நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மேற்கு வேட்டமங்கலம் அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் வயது 55. அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 60. இவர்கள் இருவரும் அக்டோபர் 25ஆம் தேதி காலை 10:45- மணியளவில், கரூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். சண்முகம் டூவீலரை ஓட்ட வேலுசாமி பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் நத்தமேடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம், ராஜசெல்வி அப்பார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த கௌதம் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டிவந்த கார், சண்முகம் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த சண்முகம் மற்றும் வேலுச்சாமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சண்முகத்தின் மனைவி செல்வி வயது 46 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கௌதம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story




