கராத்தே போட்டிகளை துவக்கி வைத்த இன்ஸ்பெக்டர்
Komarapalayam King 24x7 |27 Oct 2024 12:55 PM GMT
குமாரபாளையத்தில் கராத்தே போட்டிகளை இன்ஸ்பெக்டர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கியோ குஷன் கராத்தே அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் திறனாய்வு போட்டிகள் நடந்தது. பயிற்சியாளர் ஏகானந்தம் தலைமை வகித்தார். குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: சிறிய வயதில் கராத்தே பயிற்சி பெறுவது வரவேற்கத்தக்கது. இந்த தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள அனுப்பி வைத்த உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி. சிறந்த முறையில் பயிற்சி பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள். தாங்கள் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்கப்பட்டால், அதனை வாங்க வேண்டாம். எங்களுக்கு தகவல் கொடுங்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற தற்காப்பு கலையை கற்று, உடல் நலம் காத்திடுங்கள். உடல் நலத்தை கெடுக்கும் எதையும் சாப்பிட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார். அதன்படிதான் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான், கேரளா மாநிலத்தில் இருந்து வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் கடமையை சரியாக செய்யும் போது இறைவன் எல்லோருக்கும் தக்க வாய்ப்பை தருவார். இவ்வாறு அவர் பேசினார். இதில் சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், கவுன்சிலர் பரிமளம் கந்தசாமி, கராத்தே பயிற்சியாளர்கள் தியாகராஜன், தேவா, மூர்த்தி, சீனிவாசன்,ஆறுமுகம், ரமேஷ், சரவணன், கோகுல், அன்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story