உடுமலையில் கலாசு தொழிலாளி கொலை -மக்கள் மறியல்!
Udumalaipettai King 24x7 |27 Oct 2024 1:22 PM GMT
குற்றவாளிக்கு கடும் தண்டனை விதிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சென்னிமலை பாளையம் பகுதியில் சேர்ந்த கலாசு தொழிலாளி ரவி(35) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கலாசு தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் குடிபோதையில் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகின்றது இந்த நிலையில் ரவியை கொலை செய்த தமிழரசுவை கைது செய்யக்கோரி நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன இதனால் இந்த பகுதியில் சுமார் 1 நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது சம்பவ இடத்தில் உடுமலை காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது தற்பொழுது கொலை செய்த சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது மேலும் தமிழரசுக்கு வயது 17 என்பதால் உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுவதால் வெளியே விடக்கூடாது என தெரிவித்தனர்.
Next Story