எடப்பாடியில் வசந்த்

எடப்பாடியில் வசந்த்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியில் வசந்த்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் 122 வது வசந்த் &கோவின் கிளையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், நிதிக்குழு உறுப்பினருமான விஜய்வசந்த் இன்று திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வந்த விஜய்வசந்த்துக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் மற்றும் மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை அடுத்து வசந்த் அண்ட் கோவின் 122 வது கிளையை விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,குத்துவிளக்கு ஏற்றினார்.பின்னர் விஜய்வசந் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 'வசந்த் அண்ட் கோவில் மற்ற நிறுவனங்களை விட பொருட்கள் தரமாகவும்,விலை குறைவாகவும் மனதிற்கு நிறைவாக உள்ளதாகவும், எடப்பாடியில் வசந்த் அண்ட் கோ நிறுவனம் தொடங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள்'கூறினார்கள்.  இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் திரு.வினோத்குமார், சேலம் மாவட்ட வர்த்தக பிரிவு காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் நகர கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story