கரும்பாலையை தற்காலிகமாக மூட உத்தரவு.
Paramathi Velur King 24x7 |27 Oct 2024 3:44 PM GMT
பரமத்தி வேலூர் அருகே கரும்பாலையை தற்காலிகமாக மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பரமத்தி வேலூர், அக். 27: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள ரங்கம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி பண்ணும் நாட்டுச் சர்க்கரையில் ஆஸ்கா கலந்து தயாரிப்பதால் அதனை சுத்திகரிப்பதற்காக ஆசிட் போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தும் போது சுத்திகரிப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள் அருகில் உள்ள விவசாயிகள் நிலங்கள் மற்றும் ஏரிகளில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைவதாக ஆலையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு நாட்களாக முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடமும் ஆலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்திய பரமத்தி வேலூர் தாசில்தார் முத்துக்குமார் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர். மீண்டும் நேற்று இரவு முதல் கரும்பாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர்களை தொடர்ந்து விவசாய நிலங்களிலும் அருகில் உள்ள காலியிடங்களிலும் திறந்து விட்டதால் அப்பகுதி மக்கள் ஆலையை முற்றுகையிட்டு கழிவு நீர் கொண்டு சென்ற வாகனங்களை சிறை பிடித்து வைத்தனர். நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி, பரமத்திவேலூர் வட்டாட்சியர் முத்துக்குமார் ஆகியோர் ஆலையை ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் மற்றும் கபிலர்மலை யூனியன் சேர்மன் ரவி ஆய்வின்போது உடன் இருந்தனர். ஆய்வு செய்து வெளியே வந்த கோட்டாட்சியர் சுகந்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோரிடம் பொதுமக்கள் கரும்பாலையை நிரந்தரமாக மூட வேண்டும் கோரிக்கை விடுத்தனர். எம் எல் ஏ சேகர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் முதல் கட்ட நடவடிக்கையாக ஆலைக்குச் செல்லும் மின்சார இணைப்பை துண்டிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, சுற்றுச்சூழல் துறை,உணவு பாதுகாப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 16 துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர்களால் மாசு ஏற்படுவதை கண்டறிய மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வகத்தில் சோதனை செய்து கழிவுநீர்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை கண்டறிந்து அறிக்கை வந்த பிறகு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் சுகந்தி தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் இன்றே தொடங்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது. மேலும் கரும்பு ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு ஆலையின் முன்பு தற்காலிக பந்தள்கள் அமைத்து சுகாதார சீர்கேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் பரமத்தி வேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் ( பொறுப்பு) தலைமையில் ஜேடர்பாளையம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆய்வின்போது கரும்பு ஆளை அமைப்பதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் என்று இயங்க வந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story