சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்
மரணம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடி ஆர்.சி காம்பவுண்ட் தெருவை சேர்ந்த ஜோசப் ஜேசுராஜ் டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி வள்ளியூரில் இருந்து பைக்கில் ஏர்வாடிக்கு செல்லும் பொழுது சாலையில் விழுந்து பலத்த காயமடைந்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story