அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த தவெக நிர்வாகி மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (34). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் குளித்தலை ஒன்றிய தலைவராக உள்ளார். நேற்று குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை சாலையில் பொது இடத்தில் எவ்வித அனுமதியின்றி பேனர் வைத்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் சதாசிவம் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story