உடுமலை :தவெக மாநாடு வெற்றி பெற்ற நிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
Udumalaipettai King 24x7 |28 Oct 2024 11:37 AM GMT
நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ராமன்( உடுமலை நகர தலைவர் ) ,கேண்டிட் லூர்துசாமி (உடுமலை நகர மாணவரணி) , அருண்குமார் (குடிமங்கலம் ஓன்றிய மாணவரணி) தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர் . இந்த நிலையில் மாநாடு வெற்றி அடைந்த நிலையில் நேற்று இரவு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் உடுமலை நகர நிர்வாகிகள் காஜா , பிரேம்குமார், பிரபு ,சந்திரன் சையது இப்ராஹிம் , உடுமலை ஓன்றிய மாணவரணி சரவணன் ,உடுமலை தெற்கு ஓன்றிய மாணவரணி தினேஷ்குமார், உடுமலை நகர விவசாய அணி பார்த்திபன், உடுமலை தெற்கு பகுதி தலைமை ஜெயபிரகாஷ் ,கண்ணமநாயக்கனூர் பகுதி மாணவரணி கௌதம் ராஜ் மற்றும் நகரம் ஒன்றியம் பகுதி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story