அரசு பள்ளி மாணவன் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை
Komarapalayam King 24x7 |28 Oct 2024 12:05 PM GMT
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவன் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை பாராட்டு விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி மாணவர்கள் கடந்த 10 நாட்கள் நடைபெற்ற ஆண்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்கள். பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 360 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட 10 நாள் என்சிசி பயிற்சி முகாம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் அஜய் குட்டினோ, அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் கோபால் கிருஷ்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவற்றில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வீரநடை பயிற்சி துப்பாக்கி சுடுதல் தூரத்தை கணக்கிடுதல் வரைபட பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இவற்றில் துப்பாக்கி சுடுதலில் 8 மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார்கள். இவற்றில் பரத் என்ற மாணவன் 3 சென்டிமீட்டர் அளவிற்குள் குண்டுகளை பதித்து மிகச் சிறந்த பள்ளி மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆடலரசு , ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் ஹவிழ்தார் விஜயகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள். மேலும் நெசவுத்தொழில் ஆசிரியர் கார்த்தி, எஸ்எம்சி உறுப்பினர் ராஜேந்திரன் இருபால் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி உடனிருந்து ஏற்பாடு செய்தார்.
Next Story