தேசிய அளவிலான முகாம்களில் பங்கேற்ற திரிசாரணர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து!
Namakkal King 24x7 |28 Oct 2024 3:42 PM GMT
திருசெங்கோடு சாரண மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!
பாரத சாரண இயக்கத்தின் தேசியத் தலைமையகத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான முகாம்களில் பங்கேற்ற தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திரிசாரணர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் முதன்மை ஆணையருமான ப.மகேஸ்வரி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் ம.சிவசிதம்பரம்,மாவட்டச் செயலர் து.விஜய், சாரண ஆசிரியர் பிரதிநிதி முனைவர்.திருவருள்செல்வன், சாரண ஆசிரியர்கள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன், திரிசாரண ஆசிரியர்கள் சி.மணியரசன்,பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். தேசிய அளவிலான தூய்மை பாரத அபியான சேவை முகாம்களில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 22.09.24 முதல் 28.09.24 வரை திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த திரிசாரணர்கள் மு.கிருபாநிதி, ம.பாரத், வி.கிஷோர் ஆகியோரும், 24.09.24 முதல் 30.09.24 முதல் ஹரியானா மாநிலம் கட்புரி தேசிய பயிற்சி மையத்தில் நடைபெற்ற முகாமில் வித்யா விகாஸ் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த கோ.மெய்கண்டமூர்த்தி, பா.பரத், இ.சாமுவேல்துரை, மோ.கோவிந்தசாமி, சண்முகா பொறியியல் கல்லூரியைச் சார்ந்த மு.அரவிந்த் ஆகியோரும், டேராடுனில் 16.10.24 முதல் 20.10.24 வரை நடைபெற்ற தேசிய அளவிலான மலையேற்றப் பயிற்சி முகாமில் பள்ளக்காபாளையம் எக்ஸெல் வணிகவியல் கல்லூரியைச் சார்ந்த க.பாலமுருகன், சித்தார்த் ஆகியோரும் கலந்துகொண்டனர். திருசெங்கோடு சாரண மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)மற்றும் திருச்செங்கோடு முதன்மை ஆணையர் திருமதி.வி.கற்பகம், மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் நாமக்கல் சாரண ஆணையர் திரு.த.பச்சமுத்து , மாவட்டக்கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) மற்றும் திருச்செங்கோடு சாரண ஆணையர் திரு.எம்.ஜோதி, மாவட்டத் தலைவர் வித்யாவிகாஸ் எஸ். குணசேகரன், மாவட்ட ஆணையர்கள் முனைவர்.டி.ஒ.சிங்காரவேல், முனைவர்.வெ.தில்லைக்குமார், முனைவர். சித்ராமோகன், க.சிதம்பரம், சண்முகசுந்தரம், கே.எஸ் பழனியப்பன், சீ.ரகோத்தமன் உள்ளிட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Next Story