காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Kangeyam King 24x7 |29 Oct 2024 1:14 AM GMT
காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் திறந்துவிடும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் காங்கேயம் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில் சிஐடியு சார்பாக காங்கேயம் நகராட்சி மற்றும் வெள்ளகோவில் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களும் குடிநீர் திறந்துவிடும் பணியாளர்களும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்தத்தார் மூலமாக மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மேலும் குடிநீர் குழாய் திறந்துவிடும் தொழிலாளிகள் முறையாக சம்பளம் கூட வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் இதை தெரிந்துகொண்ட தொழிலாளி முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கேள்வி கேட்டால் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையாக வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் எப்போது தனியார் மயமாக்கப்படாதோ அப்போதிருந்து பாதிக்கப்பட்டவர்கள் இந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் திறந்துவிடும் பணியாளர்கள். சட்டம் என்ன சொல்கின்றதோ அதன் பிரகாரம் குறைந்தபட்ச ஊதியம் நீதிமன்றம் சொல்லியது போல் ஒரு நாளைக்கு ரூ.638 ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் ஆனால் இங்கு வழங்குவது ரூ.507 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒரு அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பதும், சட்டத்தை மதிக்காமல் இருப்பதும், போனஸ் போன்ற உரிமையை மறுப்பது இந்த அரசுக்கு நல்லதல்ல, அழகல்ல என்றார். மேலும் தீபாவளிக்கு இடையே இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறையின் இயக்குநர்கள் மற்றும் தமிழக அரசும் இந்த தொழிலாளிக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனசை வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காங்கேயம் தாலுகா பொறுப்பாளர் தங்கவேல் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் காங்கேயம் கிளை நிர்வாகி ர.காளி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.
Next Story