வாக்காளர்களின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |29 Oct 2024 6:06 AM GMT
நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த ஆண் வாக்காளர்கள் 7,01,538, பெண் வாக்காளர்கள் 7,47,234 மற்றவர்கள் 246 என நிகர வாக்காளர்கள் 14,49,018 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.நாமக்கல் மாவட்டத்தில் 92.இராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதியில்-261, 93.சேந்தமங்கலம் (ST) சட்டமன்ற தொகுதியில் – 284, 94..நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் – 290, 95. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் - 254, 96.திருச்செங்கோடு – 261 மற்றும் 97.குமாரபாளையம் – 279 என மொத்தம் 1629 வாக்குச்சாவடிகள் உள்ளன. இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 92.இராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதியில் 1,12,566 - ஆண், 1,18,719 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் – 10, என மொத்தம் 2,31,295 வாக்காளர்களும், 93.சேந்தமங்கலம் (ST) சட்டமன்ற தொகுதியில் 1,19,929 ஆண், 1,25,950 பெண் வாக்காளர்கள், 31 மற்றவர்கள் என மொத்தம் 2,45,910 வாக்காளர்களும், 94..நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,24,875 ஆண், 1,34,681 பெண் வாக்காளர்கள், 54 மற்றவர்கள் என மொத்தம் 2,59,610 வாக்காளர்களும், 95..பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,878 ஆண், 1,15,441 பெண் வாக்காளர்கள், 10 மற்றவர்கள் என மொத்தம் 2,21,329 வாக்காளர்களும், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,12,227 ஆண், 1,19,336 பெண் வாக்காளர்கள், 64 மற்றவர்கள் என மொத்தம் 2,31,627 வாக்காளர்களும், 97.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,26,063 ஆண், 1,33,107 பெண் வாக்காளர்கள், 77 மற்றவர்கள் என மொத்தம் 2,59,247 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 7,01,538, பெண் வாக்காளர்கள் 7,47,234 மற்றவர்கள் 246 என நிகர வாக்காளர்கள் 14,49,018 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் படி கீழ்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளார்கள். சட்டப் பேரவை தொகுதி வாக்குச் சாவடி மையங்களின் எண்ணிக்கை 27.03.2024 வாக்காளர் பட்டியல் – வாக்காளர்களின் விபரம் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் விபரம் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் விபரம் 29.10.2024 அன்று நிகர வாக்காளர்கள் ஆண் பெண் மற்றவர்கள் மொத்த வாக்காளர்கள் 92 இராசிபுரம் (SC) 261 230584 2004 1293 112566 118719 10 231295 93 சேந்தமங்கலம் (ST) 284 244113 2329 532 119929 125950 31 245910 94 நாமக்கல் 290 257915 2408 713 124875 134681 54 259610 95 பரமத்திவேலூர் 254 220265 1675 611 105878 115441 10 221329 96 திருச்செங்கோடு 261 230415 2056 844 112227 119336 64 231627 97 குமாரபாளையம் 279 257704 2479 936 126063 133107 77 259247 மொத்தம் 1629 1440996 12951 4929 701538 747234 246 1449018 இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, இன்று 29.10.2024 முதல் 28.11.2024 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் போது, 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், 17 வயது நிரம்பியவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள படிவம் 6-னை வழங்கலாம். அவர்களது பெயரானது 18 வயது நிரம்பியவுடன் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் அளிக்கலாம். மேலும் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாக்குசாவடி முகவர் (BLA) நாள் ஒன்றுக்கு 10 படிவங்கள் (அல்லது) சிறப்பு சுருக்க முறை திருத்தம் முடியும் வரை 30 படிவங்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெற்று வழங்க அனுமதிக்கப்படுவர். இறுதி வாக்காளர் பட்டியல் ஆனது எதிர்வரும் 06.01.2025 அன்று வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சுகந்தி (திருச்செங்கோடு), தேர்தல் வட்டாட்சியர் செல்வராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story