டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி.
Namakkal (Off) King 24x7 |29 Oct 2024 2:17 PM GMT
நாமக்கல்லில் மோகனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை (28/10/24-03/11/24) முன்னிட்டு நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் "ஊழல் தடுப்பு உறுதிமொழி நிகழ்ச்சி" கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் என் எஸ் எஸ் அலுவலர் வீ. கோகிலா ஊழல் தடுப்பு உறுதிமொழியினை வாசிக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவற்றை திரும்ப கூறினர். அனைத்து செயல்களிலும் நேர்மையுடன் இருப்பேன். என் செயல்திட்டம் நிறைவேற லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன். பொது மக்களின் நலன் காக்க தொடர்ந்து பணியாற்றுவேன். ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்புகளுக்கு தெரியப்படுத்துவேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு தலைமை காவலர் பி. தியாகராஜன், சிறப்பு காவல் உதவியாளர் என். பி. பாலன், கல்லூரி முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன், என் எஸ் எஸ் அலுவலர் எம் சசிகலா, உடற்கல்வி இயக்குனர் வீ அர்ச்சனா, உன்னத் பாரத் அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹேமலதா உட்பட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
Next Story