பீடியால் ஒருவர் பலி; காவல்துறை விசாரணை

விபத்து செய்திகள்
கந்தர்வகோட்டை மண்டேலா நகர் 2ஆவது தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த மாதம் 16ஆம் தேதி இரவு நன்கு குடித்துவிட்டு கயிறு கட்டிலில் பீடி குடித்தவாரு மயங்கி விட்டார். தலையணையில் பற்றிய தீ மளமளவென எரிந்தது. 70% காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Next Story