தெத்துப்பட்டி: பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு,இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்.

தெத்துப்பட்டி: பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு,இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்.
தெத்துப்பட்டி: பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு,இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக நாகராணி என்ற பட்டதாரி செயல்பட்டு வருகிறார். நாடே எதிர்பார்க்கும் தீபாவளி திருநாளில், ஆண்டுதோறும் பள்ளி மாணவ - மாணவியருக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றார். இதே போல இன்று இரவு துவங்கும் தீபாவளி திருநாள் நாளை இரவு வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி மாணவர்களும் உற்சாகமாக பங்கெடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு பள்ளி மாணவ - மாணவியருக்கும், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இன்று ஊராட்சி மன்ற தலைவர் நாகராணி இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இனிப்பு மற்றும் பட்டாசுகளை பெற்றுக்கொண்ட மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.
Next Story