பசும்பொன் தேவர் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை!

பசும்பொன் தேவர் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்டவர். இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்து இஸ்லாமிய தாய் ஆயிஷாபீவியால் வளர்க்கப்பட்டவர். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்து போராடியவர். குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பினார். அரசியலிலும் ஜொலித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதைப் போல தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பனிக்குழு தலைவர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மின்சார வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, கோட்டு ராஜா, மாநகர திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்
Next Story