சங்கரன்கோவிலில் பழுதான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சங்கரன்கோவிலில் பழுதான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பழுதான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமாகக் காணப்படும் திருவேங்கடம் சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நகரின் முக்கிய சாலையான திருவேங்கடம் சாலை வழியாகவே பழைய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கனகரக வாகனங்கள் சென்று வருகின்றன. ராஜபாளையம், தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சாலையையே பயன்படுத்துகின்றன. மேலும், முக்கிய வணிக நிறுவனங்கள் இச் சாலையில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக இச் சாலையில், பழைய பேருந்து நிலைய சந்திப்பு முதல் தற்காலிக பேருந்து நிலையம் வரை சுமாா் 2 கிமீ-க்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. ஆகவே, இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story