தீபாவளி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவசம் அலங்காரம்!
Namakkal King 24x7 |31 Oct 2024 11:37 AM GMT
தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள் புத்தாடை அணிந்து கொண்டு குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமியை சுவாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு தங்க கவசம் அலங்காரம் நடைபெற்றது.நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமிக்கு முக்கிய விசேஷ தினங்களில் தங்கம், வெள்ளி, முத்தங்கி, புஷ்ப அங்கி வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு, உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் நடைபெறும். அந்தவகையில் தீபாவளி ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு தங்க கவசம் அலங்காரம் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள் புத்தாடை அணிந்து கொண்டு குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமியை சுவாமி தரிசனம் செய்தனர்.நாமக்கல் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். ஆஞ்சநேயரை தினந்தோறும் தரிசிப்பதன் மூலம், பக்தா்களின் அனைத்து காரியங்களும் வெற்றியாகும், கல்வி அபிவிருத்தி, நோயற்ற வாழ்வு, செல்வம் கிட்டுதல், மனதில் வலிமை பெருகுதல் போன்றவை நிகழும் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளது.
Next Story