ராசிபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்

ராசிபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே பொதுமக்கள் எழுந்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பட்டாசுகள் வெடிக்க பல்வேறு நேர கட்டுப்பாடுகள் இருந்தும் பொது வழக்கம் போல் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story