நபார்டு,தமிழ்நாடு கிராம வங்கி

நபார்டு,தமிழ்நாடு கிராம வங்கி
நபார்டு,தமிழ்நாடு கிராம வங்கி
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நிகழ்வு நபார்டு, தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் மேக்னம் தொண்டு நிறுவனம் சார்பாக நாமகிரிபேட்டையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது . இதில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தலைவர் சேரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அடுத்ததாக தமிழ்நாடு கிராம வங்கியின் மேலாளர் ஸ்ரீமதி அவர்கள் கலந்து கொண்டார் . விஜய் பூபதி நிதி சார் கல்வி அலுவலர் மற்றும் மேக்னம் நிறுவன திட்ட இயக்குனர் எஸ். சத்யதாஸ் மற்றும் வங்கி அலுவலர்கள் மேக்னம் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஊழல் மற்றும் லஞ்சம் மற்றும் கண்காணிப்பு குறித்து அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அமைப்புகளில் எவ்வாறு அணுகுவது மற்றும் எவ்வாறு உயர் அதிகாரி தொடர்பு கொள்வது லஞ்சம் வாங்குவதும் தருவதும் இரண்டுமே தவறு என்பதையும் முதன்மையாக வலியுறுத்தி நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் அவர்கள் உரையாடினர் அதனை தொடர்ந்து சேரன் அவர்கள் ஊழலுக்கு எதிராக மக்கள் செயல்பட வேண்டும் ஊழல் இல்லாத அமைப்பை உருவாக்குவதற்கு தங்களது முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீமதி அவர்கள் வங்கியில் உள்ள சேவைகள்,கண்கானிப்பு வார முக்கியதுவம் குறித்தும் எடுத்துக் கூறினார் விஜய் பூபதி அவர்கள் நிதி சார் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதேபோல் கண்காணிப்பு விழிப்புணர்வு குறித்து உரை ஆற்றினார் மேக்னம் நிறுவன திட்ட இயக்குனர் S.சத்யதாஸ் அவர்கள் ஊழல் & லஞ்சத்தை ஒழிப்பதில் பெண்களின் பங்கு குறித்தும் அவர்களின் பொறுப்பு குறித்தும் மற்றும் விழிப்புணர்வு கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா குறித்தும் உரையாற்றினார் நிகழ்வில் 75 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
Next Story