அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு, ஆயுர்வேத நாள் கொண்டாட்டம்
Komarapalayam King 24x7 |1 Nov 2024 10:18 AM GMT
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் ஆயுர்வேத நாள் விழா முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகம் முன்பு மாணவ, மாணவியர் பெருமளவில் திரண்டிருந்தனர். ஊழல் தடுப்பு உறுதிமொழி வாசகத்தை முதல்வர் ரேணுகா படிக்க, மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லூரி கூட்ட அரங்கில் ஆயுர்வேத நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் ரேணுகா பேசியதாவது: உடல் ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் மிக உதவியாக உள்ளது. சுவர் வைத்துதான் சித்திரம் என்பார்கள். அதுபோல், நம் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் அனைத்து பணிகளை செவ்வனே செய்து முடிக்க முடியும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும், ஒரு நாளைக்கு 8 மணி நேர தூக்கம், தினசரி நடைபயிற்சி, ஆகியவை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். யோகா உடல்நலத்தை காப்பதில் மிகவும் சிறந்த வழியாகும். பல நூறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருந்துகள் தான் மனித குலத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில்
Next Story