ராசிபுரத்தில் இரண்டாவது நாளாக கனமழை..
Rasipuram King 24x7 |1 Nov 2024 10:28 AM GMT
ராசிபுரத்தில் இரண்டாவது நாளாக கனமழை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்போது கன மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும், சாலைகளில் மற்றும் பஸ் நிலையம், மருத்துவமனை போன்ற பகுதியில் அதிக அளவில் தண்ணீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், பயனாளிகள் என பலரும் சிரமடைந்தனர். இந்நிலையில் தற்போது இரண்டாவது நாளாக ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story