அன்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர்

X
Komarapalayam King 24x7 |1 Nov 2024 4:00 PM ISTகுமாரபாளையம் அன்னை முதியோர் இல்லத்தில் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அன்னை முதியோர் இல்லத்தில் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர். அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி,அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எதிர்மேடு, அன்னை முதியோர் இல்லத்தில், அங்கு தங்கியுள்ள 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மாநில செயலர் பெருமாள் தலைமையில் இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. தேவூர், அம்மாபாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் 25 மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், பேனா, பென்சில், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. குமாரபாளையம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலர் அர்ச்சுணன், நகர செயலர் இளங்கோவன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
Next Story
