தாந்தோணி மலை -மது போதையில் மனைவியிடம் தகராறு. தட்டிக்கேட்ட தந்தை தம்பியை தாக்கிய இளைஞர் கைது.
Karur King 24x7 |1 Nov 2024 11:19 AM GMT
தாந்தோணி மலை -மது போதையில் மனைவியிடம் தகராறு. தட்டிக்கேட்ட தந்தை தம்பியை தாக்கிய இளைஞர் கைது.
தாந்தோணி மலை -மது போதையில் மனைவியிடம் தகராறு. தட்டிக்கேட்ட தந்தை தம்பியை தாக்கிய இளைஞர் கைது. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 50. இவரது மகன் லோகேஷ் வயது 23 என்பவர், மது போதையில் அக்டோபர் 31ஆம் தேதி மதியம் 12 மணியளவில், அவரது வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை லோகேஷின் தந்தை ஜெகதீசன், அவரது மனைவி தவமணி மற்றும் அவரது தம்பி நவீன் ஆகியோர் தட்டி கேட்டு உள்ளனர். இதனால், கோபமடைந்த லோகேஷ், அனைவரையும் தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, 40க்கும் மேற்பட்ட வீட்டின் ஓடுகளையும், மரச் சட்டங்களையும் சேதப்படுத்தினார். இந்த சம்பவத்தில் ஜெகதீசன் மற்றும் நவீன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் சம்பவம் தொடர்பாக ஜெகதீசன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், லோகேஷை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து,கரூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லோகேஷுக்கு ஜாமீன் வழங்கி விடுவித்தனர்.
Next Story