வேலாயுதம்பாளையம்- மது போதையில் டூ வீலரில் தகாத வார்த்தை பேசி சென்றவரை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞரை கத்தியால் குத்தி கொலை.
Karur King 24x7 |1 Nov 2024 1:07 PM GMT
வேலாயுதம்பாளையம்- மது போதையில் டூ வீலரில் தகாத வார்த்தை பேசி சென்றவரை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞரை கத்தியால் குத்தி கொலை.
வேலாயுதம்பாளையம்- மது போதையில் டூ வீலரில் தகாத வார்த்தை பேசி சென்றவரை தட்டி கேட்டதால் தகராறு. இளைஞரை கத்தியால் குத்தி கொலை. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, வாங்கல் குப்பிச்சிபாளையம் அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த ஜெயபால் மனைவி கோயெந்தி வயது 42. இவரது மகன் கதிரவன் வயது 24. இவர்கள் இருவரும் வேலாயுதம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அமர்ந்திருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் மோகனூர் முத்தரையர் தெருவை சேர்ந்த யோகேந்திரன் மகன் கிஷோக் வயது 19 என்பவரும், கரூர், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகரை சேர்ந்த சரவணன் மகன் விஸ்வேஸ்வரன் வயது 20 ஆகிய இருவரும் மது போதையில் டூ வீலரில் தகாத வார்த்தைகளை சத்தமாக பேசியவாறு சென்று கொண்டு இருந்தனர். இதனைப் பார்த்த கதிரவன் மற்றும் அவரது நண்பர்கள் தகாத வார்த்தை பேசியவர்களை டூவீலரில் பின்னால் விரட்டிச் சென்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள கரூர் - நாமக்கல் சர்வீஸ் சாலை அருகே மடக்கிப்பிடித்தனர். அப்போது தகாத வார்த்தை பேசியது குறித்து தட்டி கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகறாறு கைகலப்பாக மாறியது. அப்போது, விஸ்வேஸ்வரன் கதிரவனை தடுத்து பிடித்துக் கொண்டார். இதனையே வாய்ப்பாக கருதிய கிஷோக் கத்தியால் கதிரவனை இடது மார்பில் குத்தி, மிரட்டல் விடுத்து, தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் மார்பில் பலத்த காயத்தோடு இருந்த கதிரவனை கரூர் அமராவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கதிரவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்த கதிரவனின் தாயார் கோயெந்தி அதிர்ச்சி அடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த கதிரவன் உடலை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக கத்தியால் குத்தி கொலை செய்த கிஷோக்கை கைது செய்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story