காங்கேயம் அருகே விவசாயி வீட்டில் திருட முயன்று தப்பி ஓடிய போது கிணற்றுக்குள் விழுந்த திருடன்
Kangeyam King 24x7 |2 Nov 2024 3:16 AM GMT
காங்கேயம் பொத்திய பாளையம் அருகே தழுஞ்சிக்காட்டுப்புதூரில் விவசாயி வீட்டில் திருட முயன்று தப்பி ஓடிய போது கிணற்றுக்குள் விழுந்த திருடன் காங்கேயம் காவல்துறை விசாரணை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயி வீட்டில் திருடன் முயன்ற போது தப்பி ஓடிய திருடன் கிணற்றுக்குள் விழுந்தான் இது குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். காங்கேயம் அடுத்த பொத்தியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தழுச்சிகாட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பு குட்டி இவரது வீட்டை இரவு பூட்டிவிட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவை மர்ம ஆசாமி திறந்து கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பு குட்டி திருடன் திருடன் என சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஊர் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்த திருடன் தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் பொதுமக்கள் திருடன் சென்ற வழியிலேயே தேடிய பின்னர் திருடன் தப்பிச் சென்று விட்டதாக நினைத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். சுப்பு குட்டியும் படுத்து தூங்கி விட்டார். மறுநாள் காலையில் சுப்பு குட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அப்போதுதான் சுப்புக்குட்டி கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அங்கு ஒரு ஆசாமி இருப்பது தெரிய வந்தது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்க்கும் காங்கேயம் காவல்துறையினருக்கும் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிற்றின் மூலம் கிணற்றின் மேலே பத்திரமாக மீட்டு வந்தார். பின்னர் காவல்துறையிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். பின்னர் கிணற்றில் விழுந்த அந்த நபரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 46) என்பதும் முன்தினம் இரவு திருட வந்த போது அனைவரும் துரத்தியதில் தப்பித்து ஓடும் போது இருட்டில் கிணற்றில் விழுந்ததாக தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் சக்திவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
Next Story