வாங்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்த வாலிபர். காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |2 Nov 2024 7:25 AM GMT
வாங்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்த வாலிபர். காவல்துறை வழக்கு பதிவு.
வாங்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்த வாலிபர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல் வகாப் மகன் சாதிக் அலி வயது 48. இவரது மனைவி ஜம்ருத் பேகம் வயது 44. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற சாதிக் அலி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்த ஜம்ருத் பேகம் உயிரிழந்தது தனது கணவர் தான் என உறுதி செய்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சாதிக் அலியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story