நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு ஸ்ரீ நவசண்டி யாகம்!
Namakkal King 24x7 |2 Nov 2024 10:45 AM GMT
மாரியம்மனுக்கு காலையில் வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது, மதியம் சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார், அம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது, இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாமக்கல் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிறைவு 48-ம் நாள் முன்னிட்டு நவசண்டி யாகத்தை சிவஸ்ரீ பாஸ்கர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. மகா கணபதி வழிபாட்டுடன் துவங்கி, புண்யாகம், கலச பூஜை, ஸ்ரீதேவி மகாத்மியம் ஹோமம், திரவியாஷ தி, காதம்பர்யாதி பலி, கோ பூஜை, வடுக பூஜை,பூர்ணாஹூதி நிறைவு பெற்ற பின் மூலவர் பலபட்டரை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர், அவர்களுக்கு அறங்காவலர்கள் மற்றும் திருக்கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, மாரியம்மனுக்கு காலையில் வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது , மதியம் சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார், அம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது, இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வினோதினி, அறங்காவலர்கள் குழு தலைவர் இரா.சேகர், திருப்பணி குழுவினர்கள் மணி(எ) சுப்பிரமணியம், வீ.பாலசுப்ரமணி, டி.டி.சரவணன் மற்றும் அறங்காவலர்கள் இளங்கோவன், செல்வராஜ், லட்சுமி, கதிரேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story