வழக்கறிஞர் சங்கத்தின் பெயரை களங்கப்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வழக்கறிஞர் சங்க தலைவர் தகவல்
Komarapalayam King 24x7 |2 Nov 2024 11:13 AM GMT
குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் பெயரை களங்கப்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வழக்கறிஞர் சங்க தலைவர் தகவல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் பெயரை களங்கப்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கத் தலைவர் சரவணராஜன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியில் நீதிமன்ற கட்டிடம் கட்ட மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்து வசதி இல்லாமை, உயர் மின் அழுத்த மின்கம்பி செல்லும் வழி உள்ளிட்ட காரணங்கள் எடுத்துரைத்து, அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் கட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆட்சேபம் தெரிவித்தோம். ஆனால், சில நாட்களுக்கு முன் அந்த இடம் நீதிமன்ற கட்டிடம் கட்ட தேர்வாகி விட்டது என்றும், அதற்கு முதல்வர், உள்ளிட்ட பலருக்கும் நன்றி என குறிப்பிட்டு, போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்பட நகரின் பல இடங்களில் பிளெக்ஸ் பேனர் வைக்கபட்டிருந்தது. இதில் வழக்கறிஞர் சங்க பெயரும் குறிப்பிடப்பட்டிருந்ததால், இது குறித்து பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததால், நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, குமாரபாளையம் போலீசார், இதற்கு காரணமான , பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் ஸ்ரீகணேஷ், தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் உறுப்பினர் கதிர்வேல், சமூக செயற்பாட்டாளர் பழனிச்சாமி மூவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் பெயரை களங்கப்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். -
Next Story