உலக சேமிப்பு தின விழிப்புணர்வு

X
Komarapalayam King 24x7 |2 Nov 2024 4:47 PM ISTகுமாரபாளையம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விடியல் ஆரம்பம் சார்பில் உலக சேமிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக உலக சேமிப்பு தினத்தில் மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதற்கான கூட்டத்தில் விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இவர் பேசியதாவது: பணத்தேவை கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். அத்துடன், எதிர்காலத்திற்கான சேமிப்பும் மிக முக்கியம். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் ஆண்டுதோறும் உண்டியல் வழங்கப்படுகிறது. சென்றாண்டு உண்டியல் சேமிப்புகளை மாணவ மாணவிகள் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் தீனா, ஜமுனா,சித்ரா, பிரகாஷ், கண்ணன், கோமதி, உள்பட பலர் பங்கேற்றனர்
Next Story
