ராசிபுரத்தில் மூன்றாவது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வழங்கம் போல் தண்ணீர் புகுந்தது..
Rasipuram King 24x7 |2 Nov 2024 11:34 AM GMT
ராசிபுரத்தில் மூன்றாவது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் வழங்கம் போல் தண்ணீர் புகுந்தது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தற்போது கனமழை பெய்து வருகிறது. ராசிபுரம் நகர் பகுதிகளான சின்னகடைவீதி, பெரியகடை வீதி சிவானந்தா சாலை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆண்டகளூர்கேட், ஆர்.புதுப் பாளையம், பட்டணம், வெண்ணந்தூர், வடுகம், நான்கிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வளாகத்துக்குள்ளும் தண்ணீர் சூழ்ந்தது. இன்றும் மழை பெய்யக்கூடும் என்பதால் முன்கூட்டியே நோயாளிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். ராசிபுரம் அரசு மருத்துவமனை பகுதியானது சாலையை விடவும் மிகவும் பள்ளத்தில் அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியில் தற்போது புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கோனேரிப்பட்டி பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலரிடம் தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story