ராசிபுரம் அருகே மக்காச்சோளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து
Rasipuram King 24x7 |2 Nov 2024 12:10 PM GMT
ராசிபுரம் அருகே மக்காச்சோளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில், 11 டன் எடையுள்ள மக்காச்சோளம் மூட்டைகள் ஏற்றுக்கொண்டு நாமக்கல் நோக்கி டாரஸ் லாரி சென்றது. டாரஸ் லாரியை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் கிளீனர் ஒருவரும் உடன் இருந்தார். இந்நிலையில், ராசிபுரம் அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பாவைக்கல்லூரி மேம்பாலம் அடுத்த ஜெய்ஹிந்த் தனியார் மில் அருகே டாரஸ் லாரி சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் உயிர்தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர் . அப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைக்கு மக்காச்சோளம் கொண்டு செல்வதும், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மக்காச்சோளம் மூட்டைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Next Story