தளவாய் பாளையம்- நண்பனுடன் டூவீலரில் சென்றபோது சென்டர் மீடினில் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு.

தளவாய் பாளையம்- நண்பனுடன் டூவீலரில் சென்றபோது சென்டர் மீடினில் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு.
தளவாய் பாளையம்- நண்பனுடன் டூவீலரில் சென்றபோது சென்டர் மீடினில் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு. கரூர், வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன் விக்னேஷ் வயது 25. இதேபோல கரூர் திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் மாணிக்கவாசகம் வயது 20. இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி மாலை 4 மணியளவில், இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட தளவாய் பாளையத்திலிருந்து வேலாயுதபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். டூ வீலரை விக்னேஷ் ஓட்டிச் சென்றார். இவர்கள் சென்ற வாகனம் தளவாய் பாளையம் நேஷனல் பள்ளி அருகே சென்றபோது, டூவீலரில் வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீதியானில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்து வந்த மாணிக்கவாசகத்திற்கு தலை, இடது கால், கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல, விக்னேஷுக்கும் இடது கை மற்றும் உதடு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் மாணிக்கவாசகத்தை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விக்னேஷை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த மாணிக்கவாசகத்தின் மனைவி தேன்மொழி வயது 19 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story