ஜேடர்பாளையம் அருகே புகையிலை விற்பனை செய்த ஒருவர் கைது.
Paramathi Velur King 24x7 |2 Nov 2024 2:09 PM GMT
ஜேடர்பாளையம் அருகே புகையிலை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்,நவ.2- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் ,பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கதீஜா பேகம் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(39 )என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story