கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்.

கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்.
கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. முதல் நாளான இன்று சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இன்று நடைபெற்ற பூஜையில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோவிலுக்கு வந்து விரதம் மேற்கொள்ள கைகளில் கங்கணம் கட்டி சென்றனர். மேலும் 7ஆம் தேதி மாலை 5 மணி அளவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 8 ஆம் தேதி காலை முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் கபிலர்மலை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story