அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு விழா
Arani King 24x7 |3 Nov 2024 6:14 AM GMT
ஆரணி சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இரவு ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.
ஆரணி சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. சேத்துப்பட்டு அருகே வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி அமாவாசை முன்னிட்டு காலை மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அங்காள பரமேஸ்வரியை கோயில் எதிரே உள்ள ஊஞ்சலில் அங்காளம்மன் கௌதாரி அம்மன் அலங்காரரூபத்தில் அமர்த்தி ஊஞ்சல் தாலாட்டு விழா தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
Next Story