ஆரணியில் உள்ள குண்டும், குழியுமான சாலையில் மணல் கொட்டிய நெடுஞ்சாலைத் துறையினர். பொதுமக்கள் எதிர்ப்பு.
Arani King 24x7 |3 Nov 2024 6:21 AM GMT
ஆரணி காந்திரோடில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் எம்.சாண்ட் மணல் கொட்டி நிரப்பும் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேட்ச் ஒர்க் செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினரை முற்றுகையிட்டனர்.
ஆரணி காந்திரோடில் குqண்டும், குழியுமாக உள்ள சாலையில் எம்.சாண்ட் மணல் கொட்டி நிரப்பும் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேட்ச் ஒர்க் செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினரை முற்றுகையிட்டனர். ஆரணி காந்திசாலையில் குண்டும், குழியுமாக இருப்பதால் தீபாவளி அன்று சென்னயில் வந்திருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இச்சாலையில் தவறி விழுந்து கார் ஏற்றி இறந்தார். மேலும் சாலை பள்ளம், பள்ளமாக இருப்பதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என புகார் சென்றது. இதன் காரணமாக சனிக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினர் எம்.சாண்ட் மணல் கொட்டி அதன்மீது சிமெண்ட் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சுதாகுமாரின் கணவர் குமார் என்பவர் அப்பகுதி மக்களுடன் சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் தார் போட்டு பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் சாலை மறியல் செய்வோம் என்று தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை உதவிசெயற்பொறியாளர் வரதராஜன், சாலை ஆய்வாளர் கோமதி மற்றும் சாலைப்பணியாளர்கள் ஆகியோரை முற்றுகையிட்டனர். பின்னர் 2 நாட்களில் சீர்செய்து தார் பேட்ச் ஒர்க் செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story