கூடலூரில் உள்ள கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது
Sankarankoil King 24x7 |3 Nov 2024 9:58 AM GMT
பாலசுப்பிரமணியம் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கூடலூரில் அமைந்துள்ள திருநாதகிரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசால பூஜையுடன் இன்று காலையில் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு திருநாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, தயிர், கரும்புச்சாறு உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story