திமுக பத்திரிக்கையாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நம்பி உள்ளது - இபிஎஸ்

திமுக பத்திரிக்கையாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நம்பி உள்ளது - இபிஎஸ்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நகர செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகர அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் செயல்பாடு குறித்தும் உறுப்பினர் படிவம் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ஆலோசனை வழங்கினார் அதனைத் தொடர்ந்து பேசுகையில் தற்போது மக்களின் இடையே அதிமுகவின் செல்வாக்கு  அதிகரித்துள்ளது என்றும் திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளது திமுக அதன் கூட்டணி மற்றும் பத்திரிக்கையாளர்களை நம்பியே உள்ளது அதிமுக மக்கள் செல்வாக்கு மிகுந்த கட்சி அதற்காக கூட்டணி இல்லை என்பது கிடையாது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வலுவான வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.  தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி செய்கின்ற மாநிலமாக மாறி உள்ளது. எனவும் இதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டி பேசினார். அப்போது எடப்பாடி நகரக் கழகச் செயலாளர் முருகன், முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்டச் செயலாளர் மற்றும் நகர பேரூர் கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story