சிவன்மலை அடிவாரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தை அகற்றக் கோரிக்கை

X
காங்கேயத்தை அடுத்த சிவன்மலை ஊராட்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் நஞ்சுண்டீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுவற்றின் அருகில் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்து வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீசிய காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து கோவில் சுவற்றின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. மீதமுள்ள மரம் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மீதும் உள்ள மரக்கிளையும், மரத்தின் அடிப்பகுதியுடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் வந்து இந்த மரத்தை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
Next Story

