வைகை அணையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

X
வைகை அணைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கேரளா மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பார்த்துச் செல்ல தவறுவதில்லை. அடுத்தடுத்து பெய்த மழையில் வைகை அணையில் உள்ள செடி, கொடிகள் பசுமையுடன் பூத்துக் குலுங்குகின்றன. 5 ஆயித்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து, வைகை அணையின் வலது, இடது கரைகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பூங்காக்களில் உலா சென்று ரசித்தனர். வைகை அணையில் மேல், கீழ் பகுதி மதகுகள் வழியாக நீர் திறப்பு இல்லாதது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்தாலும் பரந்து விரிந்து வைகை அணையின் நீர்த்தேக்க பரப்பை ரசித்து சென்றனர். சுற்றுலா பயணிகளால் வைகை அணை கடைகளில் சில்லறை வியாபாரம்விறுவிறுப்பாக இருந்தது.
Next Story

