மாநகராட்சியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

மாநகராட்சியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டு பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றும் பணிகளை கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட மறக்குடி தெரு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மோட்டார் பம்ப் அமைத்து கழிவு நீர் வெளியேற ஏற்பாடு செய்ததுடன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது அப்பகுதியில் கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் மறக்குடி தெரு பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டப் பிரதிநிதி ஜஸ்டின், மாநகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, திரேஸ்புரம் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Next Story