விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் இன்று (4ம் தேதி) திங்கட்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இன்று (4ம் தேதி) திங்கட்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் விசைப்படகுகள் இரவு 9 மணிக்குள் கரைக்கு வந்து விட வேண்டும் என்பது நிபந்தனை ஆகும். இதனால் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க முடியாததால் விசைப்படகு உரிமையாளர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சென்று வந்தனர். ஆனாலும் மீன்பாடு அதிகம் இல்லாததால் தினசரி குறைந்த அளவு விசைப்படகுகளை கடலுக்குள் சென்று வந்தனர். இதனால் விசைப்படகு உரிமையாளர்களுக்கும் விசைப்படகு தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்தது. ஒரு விசைப்படகானது வாரத்தில் 3 நாள் மீன்பிடிக்க செல்வதா அல்லது 6நாட்களும் மீன்பிடிக்க செல்வதா என்பது சம்பந்தமாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்கள் இடையே பிரச்சைன நிலவுகிறது. இது தொடர்பாக இன்று 4ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசை படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.
Next Story