பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய வழக்கில் இரண்டு பேர் கைது.

பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய வழக்கில் இரண்டு பேர் கைது.
பரமத்தி வேலூர் அருகே ஆடு திருடி வழக்கில் இரண்டு பேர் கைது. தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர், நவ.4: நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் அருகே உள்ள நல்லியாம்பாளையம்புதூர், பகுதியை  சேர்ந்தவர் காசிமணி (58) விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர்  நாமக்கல் தனியார் மருத்துவமனையில் உள்ள  தாயாரை பார்ப்பதற்காக  கடந்த இரண்டாம் தேதி சென்று விட்டு  மூன்றாம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த  இரண்டு ஆடுகள்   காணாமல் போனது தெரியவந்தது. ஆடுகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும்  கிடைக்காததால் காசிமணி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மோகனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது  மோகனூர் செல்லும்  மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத மூன்று பேர் இரண்டு ஆடுகளுடன்  நின்று கொண்டிருந்தை பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில்  விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது ஓருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரையும் பிடித்து  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நல்லியாம்பாளையம்புதூர் பகுதியில் இரண்டு ஆடுகளை திருடிக் சென்றவர்கள் என்பது தெரியவந்தது.‌ அதனையடுத்து ஆடுகளை திருடிய  ஈரோடு மாவட்டம்,  ஊஞ்சலூர், வெற்றிகோனார் பாளையத்தைச் சேர்ந்த  முத்துவேல் மகன் பிரேம்குமார் (19), பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிப்பாளையம், மண்டபத்துபாறையைச் சேர்ந்த முருகேசன் மகன் காவக்காரன் என்கிற கார்த்திகேயன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான  குப்புச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா (24) என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story