தொடர் மழையால் நிரம்பிய கிணறுகள்

தொடர் மழையால் நிரம்பிய கிணறுகள்
குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால் கிணறுகள் நிரம்பியுள்ளன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மாலை  மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் விடாத நிலையில், கிணற்றில் கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டு, விவசாயம் செய்வது என்பது கேள்விக்குறியானது. தற்போது ஆகஸ்ட் முதல் தண்ணீர் வாய்க்காலில் வந்து கொண்டுள்ளது. மேலும் தற்போது மழையும் பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் நிரம்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story