கந்தம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.

X
Paramathi Velur King 24x7 |4 Nov 2024 8:15 PM ISTகந்தம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்தி வேலூர்,நவ.4: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் நல்லூர் போலீஸ் எஸ்ஐ கங்காதரன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த திருச்செங்கோடு வாழ்றகேட் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடைய மகன் ரத்தீஷ் (17) என்பவரை போலீசார் விசாரணை செய்து சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரித்தீஷ் வேறொரு நபருக்கு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
Next Story
